எழுத்தாளர்: இந்திரா சௌந்தர்ராஜன்
பொன்னி சொன்னதைப் போல் பாண்டியன் சொர்ண சித்தரைச் சந்திக்கிறான். அங்கே பாலுவின் தந்தையான , இப்போது சித்தராக மாறிவிட்ட சுந்தர்ராஜனையும் காண்கிறான். அங்கே கண்ணனின் சடலமும் , அதற்கு காவலாக நாகமும். சுந்தர்ராஜன் கண்ணனின் உடலுக்கு கூடு விட்டு கூடு மாற , சுந்தர்ராஜனின் உடல் விழ , இப்பொது அந்த உடலுக்கு காவலாக நாகம்.
கண்ணனின் உருவில் சுந்தர்ராஜன் பாண்டியனுடமும் பாலுவுடனும் சிவன்மலை விட்டு சென்னை வருகிறார். இச்சதாரி பரணியிடம் ரிஷப சித்தர் சுந்தர்ராஜன் உருமாறிவிட்ட விவரத்தைச் சொல்ல , அவனும் காட்டை விட்டு அவரைத் தேடி சென்னை வருகிறான்.

பொன்னி பாலுவின் வீட்டில் தங்கிவிட , வலிப்பு நோய் உள்ள வித்யாவிடம் நோய் குணமாக சூரணத்தைத் தருகிறார் கண்ணன். மேலும் மங்களத்திடம் , கண்ணன் திரும்பி வர , நாகக்கல்லை தந்து 48 நாட்களுக்குப் பூஜை செய்ய சொல்கிறார். பிறகு கண்ணனின் வீட்டிற்குச் சென்று கண்ணன் போல் வாழ தொடங்குகிறார். அவர்கள் வீட்டின் எதிரே உள்ள மரத்தின் மேல் பாம்பு உருவில் இருக்கும் பரணியைக் கண்டு சுந்தர்ராஜனின் ஆத்மா அதிர , சித்தர் பெருமக்களை நினைத்துக் கொள்கிறார்.
பாண்டியன் இன்ஸ்பெக்டரைச் சந்திக்க , காட்டில் தூக்கில் தொங்கிய இளைஞன் ரசவாதத்தைப் பற்றி அறிந்துக்கொள்ள சிவன்மலைக்குச் சென்ற ஆசாரியின் மகன் என தெரிய வருகிறது. இதற்கிடையே , ரசவாதத்தைப் பற்றி அறிந்துகொள்ளவும் சிவன்மலை ரகசியங்களைக் கைப்பற்றவும் குருஜியின் கையாள் தான் தமயந்தி என தெரியவருகிறது. தமயந்தியின் மூலம் அவர்களின் கூட்டத்தால் இறந்துபோன கண்ணான் உயிர்பெற்று வந்த அதிசயத்தைத் தெரிந்துக் கொள்கிறார். காட்டில் நடக்கும் சம்பவங்களைக் கண்காணிக்கச் சொல்கிறார்.
இனி சிவன்மலையில் நடக்க போகும் அதிசயங்கள் என்ன? சுந்தர்ராஜன் திரும்பி வந்து விட்ட நிலையில் அவரின் குடும்பத்தின் நிலை உயருமா? சித்த விளையாட்டைக் காண , படியுங்கள் சிவமயத்தை.