வணக்கம்!
அன்புள்ள வாசகர்களே, welcome to My Kutty Story.
புத்தகங்கள் வாசிப்பது என் hobby. அதிலும் கதை புத்தகங்கள் வாசிக்க உட்கார்ந்தா நேரம் போவதே தெரியாது. இந்த பழக்கம் வரதுக்கு முக்கிய காரணம் என் அம்மா. வீட்லே ஒரு குட்டி Library-யே வச்சிருகாங்க. என்னடா இவங்க எப்ப பார்த்தாலும் books-ல முழ்கிடுராங்களே-னு சின்ன வயசுலே தோணும். school பாடம் முடிஞ்ச உடனே, முதல் வேலையா கதை புத்தகத்தை கையிலே எடுதுருவேன் (திருட்டுத்தனமாகத்தான்). அம்மா பார்த்துடாங்கான செம்ம பாட்டு விழும் but நம்ம தான் சொன்ன கேட்க மாட்டோமே….
இப்படி ஆரம்பிச்சு, புத்தகம் படிப்பது இப்போ அன்றாட schedule-ல ஒரு அங்கம். Lockdown-ல வாசிக்க இன்னும் அதிக time கெடைச்சுது. ஆனா, இதுக்கு இடையில வாழ்கையிலே ஒரு பெரிய இழப்பு/வழி. இதிலிருந்து எப்படி மீள்றது, எதாவது செய்யன்னு ஒரு துடிப்பு. அப்போ உதிச்ச idea தான் இந்த Blogging! நமக்கு பிடிச்ச விஷயங்களைச் செய்யும்போது, தெரிந்த தகவல்களைப் பகிரும்போது ஒரு தனி சுகம்தான். நான் படித்த, படித்துகொண்டிருக்கிற புத்தகங்களைப் பத்தி இங்கே பேச போறேன். இல்ல எழுதபோறேன்.
என்னோட பயணிக்க நீங்கள் தயாரா? வாங்க உலா போகலாம்:)