எழுத்தாளர்: பட்டுக்கோட்டை பிரபாகர்
தொழிற்சாலை நிறுவனத்தின் உரிமையாளர் மனோகர். கல்யாணம் ஆகி நான்கே மாதங்கள் ஆகிருக்கே புது மனைவி வித்யாவுடன் சினிமா செல்ல கிளம்ப தொழிற்சாலை ஊழியர்கள் அவனைக் காண வருகிறார்கள். வந்தவர்கள் அவனுடன் Union அமைப்பதை பற்றி பேச முயல அவன் வீட்டுக்கு போன் சினிமாவிற்றகு தற்போது தன்னால் வரமுடியாது எனவும் நாளை சினிமாவிற்கு செல்லலாம் என வித்யாவிடம் சொல்லிவிடுகிறான்.
தொழிலாளர்களுடன் பேசிக் கொண்டிருக்கையில் வீட்டிற்கு வருமானத்துறை அதிகாரிகள் வந்திருப்பதாக அழைப்பு வருகிறது. விழுந்தடித்து கொண்டு பதட்டத்துடன் வீட்டிற்கு சென்றால் அங்கே அப்படியே யாரும் வரவில்லை என சொல்கிறாள் வித்யா. குழப்பத்துடன் சினிமாவிற்கு செல்கிறான். தெளியாத முகத்துடன் இருக்கும் அவனிடம் அவள்தான் அப்படி விளையாட்டாக போன் செய்து அவனை வரவைத்தாக கூறுகிறாள். கோபத்தில் எரிந்து விழும் மனோகரை ஒரு வழியாக சமாளிக்கிறாள் வித்யா.

இடையில் மனோகருக்கு தெய்வ நாயகத்துடன் மோதல் ஏற்பட அதன் விளவைவாக அவனோ மனோகரின் தொழிற்ச்சாலை லாரிகளை மடக்கி அதனுள் இருந்த பொருட்களை எரித்து பெரும் நஷ்டத்தை விளைவிக்கிறான். மனோகரை எதேச்சையாக ஒரு நாடகத்தில் காணும் புகைப்பட கலைஞனுக்கு அவனை எங்கேயோ பார்த்த ஞாபகம் வருகிறது. யோசித்து யோசித்து மனோகர் ஒரு முறை ஒரு இளம்பெண்ணுடன் அவனின் ஸ்டுடியோவுக்கு வந்து நெருக்கமாக புகைப்படம் எடுத்துக்கொண்ட நினைவு வருகிறது. அந்த புகைப்படத்தை வைத்து வியாபாரம் பேச முயலுகிறான் அவன்.
தனது முன்னாள் காதலி மாலினி பற்றி வித்யாவிடம் மனோகர் சொல்ல வர அவளோ மயங்கி விழுகிறாள். அதனால் தன் காதலைப் பற்றி சொல்லவே வேண்டாம் என மனோகர் முடிவெடுக்கிறான். கணவர்களின் சந்தேகத்திற்கு இடம்கொடாமல் மனைவிமார்கள் நடந்து கொள்ளவேண்டும் என வித்யாவின் தோழி ரேவதி சொல்ல தன் கணவன் அப்படி அல்ல என சாதிக்கிறாள் வித்யா. ரேவதியோ எல்லா கணவர்களும் ஒன்று தான் என சொல்கிறாள்.
கணவனைச் சோதித்துப் பார்க்க வித்யா ஒரு விபரீத விளையாட்டை விளையாடுகிறாள் அதன் ஆபத்தான விளைவை உணராமல். மனோகரின் இளமைக்கால காதல் தெய்வ நாயகத்துடனான தொழில் வகை மோதல் மனைவி வித்யாவின் விபரீத விளையாட்டு அவனின் கழுத்தைச் சுறுக்கும் சுறுக்கு கயிறுகளாக மாறப்போவதை அவன் சமாளிப்பானா?