எழுத்தாளர்: இந்திரா சௌந்தரராஜன் (Indra Soundar Rajan)
நாவல் உலகத்துலே திரு இந்திரா சௌந்தரராஜன் பற்றி அறியாதவங்கே இருக்கவே முடியாது. இவரது இயற்பெயர் P.சௌந்தர் ராஜன் (b-13 நவம்பர் 1958). நிறைய பிரபலமான சிறுகதை, நாவல், நாடக தொடர்களுக்கு சொந்தக்காரர். இந்து பாரம்பரிய வழக்கங்கள் மற்றும் புராணகதைகளும் இவரது விரல் நுனியில். அமானுஷ்யமான விசயங்கள். மறுஜென்மம், தெய்வீக சங்கல்பம், பேய், பிசாசு சம்பந்தபட்ட கதைகளில் இவரை அடிச்சிக்க ஆள் இல்லை. வாங்க கதைக்குள்ளே போவோம்.
சித்தர்பட்டி எனும் மலைகிராமத்தில் இருக்கும் சித்தேஸ்வரர் கோயிலின் மகிமை வெண் குஷ்ட நோயிலிருந்து குணமான வைரவன் செட்டியாரால் வெளி உலகுக்கு தெரியவருது. கோயிலின் கிணற்று சுனைநீரால் தீராத நோய்களும், மனநோய்களும் தீருது. ஆனால் இங்கே ஒரு கட்டுப்பாடு/வழக்கம். மாலை 6 மணிக்கு மேல கோயிலுக்கு உள்ளே யாரும் நுழைய கூடாது. கட்டுப்பாட மீறுபவர்களுக்கு காலபைரவரால மரணம் சம்பவிக்கிறது. கோயில் பட்டரின் மகன் மணிசுந்தரத்தின் பத்திரிகையாளர் நண்பன், இதை ஆராய முற்பட, மறுநாள் காலையில் நாய் கடித்து குதறப்பட்ட நிலையில் பிணமாக கிடக்கிறான்.

இடையில், கோயில் கும்பாபிஷேகம் நடத்த கூடாது, புதிய நோயாளிகளை ஆசிரமத்தில் சேர்க்ககூடாது-னு சித்தர் ஓலை வருது. மக்கள் இது சித்தர்களுடைய வாக்குன்னு நம்பறாங்க, மேலும் 6 மணிக்கு மேல சித்தர்கள் கோயிலுக்கு உள்ளே சித்தேஸ்வரர் சாமிக்கு பூஜை செய்யறதா ஒரு ஐதீகம்.
கட்டுபாட்டை மீறி மனநல பாதிக்கபட்டவரை ஊமை சித்தரின் ஆசிரமத்தில் சேர்த்த பட்டர் மகள் லலிதாவை பாம்பு கடிக்க, தன் அப்பாவை தேடி அந்த வழியில் வந்த பிரசாத், தகுந்த நேரத்தில் வைத்தியர் வீட்டுக்கு அழைச்சுட்டு போறான். லலிதா ஆசிரமத்தில் சேர்த்த பைத்தியகாரர் தன் அப்பா-னு தெரியவும் அதிர்ச்சி அடைகிறான். சென்னையில் மிக பிரபலமான மனநல மருத்துவர் GK-கு ஏன் இந்த நிலைமை? GK-வை தேடிகிட்டு அவரது உதவியாளரும் சித்தர்பட்டி வந்து சேர்றாரு. அவரும் மர்மத்தை கண்டுபிடிக்க முயல, சித்தர்கள் சாமிக்கு பூஜை செய்வதை கண்கூடாக பார்க்கிறார். உத்தரவு மீறி பார்த்ததை மற்றவங்களுக்கு சொல்ல போக, பரிதாபமாக இறந்தும் போகிறார்.
இங்க நடக்குற மர்ம நிகழ்வுகள் எல்லாம் சித்தர்களோட சித்தமா இல்ல மனிதர்களோட செயலா? நடக்குறது எல்லாம் சாமி இல்ல ஆசாமிகளோட வேலைதான்னு உறுதியா நம்பும் மணிசுந்தரம் பிரசாத்தோட சேர்ந்து மர்ம முடிச்சுகளை அவிழ்க்க துப்பு துலக்க ஆரம்பிக்கிறான்.
- கோயில நடக்கிற அனைத்துக்கும் காரணம் பைரவ சாமி இல்ல ஆசாமியா?
- சித்தர்கள் பூஜை செய்வதை உதவியாளர் பார்த்து நிஜமா? சுனைநீரால் நோய்கள் எப்படி குணமாகிறது?
- மணிசுந்தரதோட துப்பு துலக்கும் நபர்களுக்கு என்னவானது? லலிதா பிரசாத் காதல் கைகூடியதா?
எல்லா கேள்விகளுக்கும் பதில் “Ragasiyamaga Oru Ragasiyam” புத்தகத்தில். இந்த கதை இந்திரா சௌந்தரராஜனின் ஒரு அருமையான படைப்பு. அடுத்து என்ன நடக்கபோகுதுன்னு பரபரப்பு கடைசி வரைக்கும் இருந்தது. ஒவ்வொரு மர்ம முடிச்சும் அவிழும் போது ரொம்ப அழகாக இருக்கும். கடைசிலே twist reveal ஆகரவரைக்கும் கதையை சுவாரசியமாக கொண்டு சென்றது ஒரு பெரிய plus point!
மறக்காம வாங்கி படிங்க. மிஸ் பண்ணிடதிங்க.
ps: கதைய எங்கேயோ கேட்ட மாதிரி இருக்குமே? Kavithalaya production-ல, நாகா அவர்கள் இயக்கிய மர்ம தேசம் Marmadesam: Ragasiyam இந்த நாவலை தழுவி எடுக்கபட்டதுதான். எழுத்தாளர் இந்திரா சௌந்தரராஜன் இந்த தொடரில் ஒரு சின்ன கதாபாத்திரத்தில் நடிச்சியிருக்கார்.
