எழுத்தாளர்: இந்திரா சௌந்தர்ராஜன்
கதையின் நாயகி ராதா ஒரு தியாகி, புத்திசாலியும் கூட. அப்பா கருணாகரனின் சம்பளத்தில் குடும்பம். கணவனுக்கு அடங்கி இருக்கும் மனைவி. சுயநலம் , பேராசை மிக்க தங்கை நந்தினி. பேதையான மற்றொரு தங்கை ரஞ்சனி. கூடவே திருமணம் ஆகி தன் மனைவியைக் காதலித்தவனுடனே அனுப்பி வைத்த பெரியப்பா. இவர்களுக்கு துணையாக வாத நோயால் பாதிக்கப்பட்ட கருணாகரனின் மைத்துனன் மகன் கணேசன்.
ராதாவுக்கு மாப்பிளை பார்க்க வந்த ஜெகதீஷைப் பார்த்து , நமக்கு இந்த வரன் அமையவில்லையே என பொறாமையில் கொதிக்கிறாள் நந்தினி. ராதாவை விட மிகுந்த அலங்காரத்தோடு வர அவள் மனக்கிடங்கை உணர்த்துக் கொள்ளும் கணேசன், மற்ற பொருள்களை விட்டு கொடுத்தது போல் இந்த மாப்பிள்ளையும் விட்டு கொடுத்து விடாதே என ராதாவிடம் எச்சரித்துவிட்டு செல்கிறான்.

ஜெகதீஷ்க்கும் ராதாவுக்கும் ஒருவருக்கொருவர் பிடித்துப்போய் விட மாப்பிளை வீட்டாரும் வரதட்சணை கேட்காமல் போகவே திருமண ஏற்பாட்டைக் கவனிக்க வீட்டை அடமானம் வைக்கிறார் கருணாகரன். ராதாவின் மேலுள்ள குமைச்சலால் நந்தினி சண்டையிட இந்த திருமணமே நடக்காது என ஆத்திரத்தில் கூச்சலிடுகிறாள் நந்தினி. கணேசன் சமயத்தில் நிலையை சமாளிக்கிறான்.
நகைகள் வாங்க கருணாகரனும் அவரின் மனைவியும் செல்ல அவர்களுக்கு விபத்து நேர்ந்துவிட்டது என செய்து வரவும் குடும்பமே இடி விழுந்தது போல் ஆடிப்போகிறார்கள்; நந்தினியை தவிர. கருணாகரன் விபத்து நடந்த இடத்திலே இறந்து விட்டிருக்க அவரின் மனைவி மட்டும் சுயநிலவில்லாமல் கோமாவுக்கு சென்று விடுகிறார்.
குடும்பத்தில் சூழ்நிலை தலைகீழாக மாற தான் திருமணம் செய்வது சரி வராது என முடிவெடுத்து , நந்தினியை ஜெகதீஷ்க்கு மணமுடித்து வைக்க தீர்மானிக்கிறாள். இந்த முடிவுக்கு கணேசன் கடும் எதிர்ப்பு தெரிவிக்கிறான். ஜெகதீஷ் போன்ற ஒரு மாப்பிள்ளை கிடைப்பது அபூர்வம் என வாதிடுகிறான்.
ராதாவோ தீர்மானமாக ஜெகதீஷைச் சென்று சந்திக்க ஜெகதீஷோ அக்காவை பெண் பார்க்கவந்து விட்டு , தங்கையை மணப்பது எந்த வகையில் சாத்தியம் என கேட்கிறான். இனிமேல் இதை பற்றி பேசவேண்டாம் என கறாராக சொல்லிவிடுகிறான். ஆனால் ஜெகதீஷ் கண்டிப்பாக நந்தினியை மணப்பான் என ராதா ரஞ்சனியிடம் உறுதியாக சொல்கிறாள்.
ராதா எடுத்த முடிவு சரியா? ஜெகதீஷின் நிலைப்பாடு என்ன?
தியாகமே உருவமான ஒரு பெண்ணின் போராட்டங்களே யாதுமாகி நின்றாள்! |