பிச்சைக்கார மடத்திற்கு வருகிறார் சந்நியாசி ஒருவர். அன்னதான மடத்தில் உணவளிப்பதாக பொய் கணக்குக் காட்டி, உணவை உணவகங்களுக்கு விற்கும் மோசடி நடக்கிறது. பசி தாங்காமல் சாப்பாடு கேட்கும் பிச்சைக்காரனை அடித்து துவைக்கின்றனர் மடத்தில் உள்ளவர்கள். சந்நியாசி அவனைத் தொட்டு தூக்கியதும் வலி குறைந்தவனாக உணருகிறான் அவன். உனக்கு வடை பாயசத்துடன் உணவு வேண்டுமா என கேட்க, அவனோ தலையசைக்க, சிறிது நேரத்தில் உணவு பண்டங்களோடு அன்னதானம் அளிக்க வருகிறார் ஒருவர்.
வந்தவரைத் தடுக்கிறான் மடத்தின் தலைவன். நீ செய்யாவிட்டாலும் செய்பவரை ஏன் தடுக்கிறாய் என சந்நியாசி கேட்க, அவரை நின்ற இடத்திலேயே எரித்துவிடுவதாக எச்சரிக்கிறான் அவன். அன்னதானம் போட வந்தவர் வேறு இடத்தில் உணவளிப்பதாக கூறவும் அவன் அமைதியாகிறான். ஏகத்தாளமாக உள்ளே சென்று புகைபிடிக்க ஆரம்பிக்கிறான். அப்பொழுது சந்நியாசி ஒரு சமித்து குச்சியைப் பார்க்க அதில் சட்றென்று தீ பற்றியது.
அதே சமயம் உள்ளே புகைபிடிப்பவனின் வேட்டி முனையில் தீ கங்கு பட, அது தீ நாக்காக மாறி அவன் உடல் முழுதும் பரவ தொடங்குகிறது. அவன் அய்யோ அம்மா என கதறிக்கொண்டே அனைவர் முன்னிலையிலும் கரித்துண்டமாக விழுந்தான். சந்நியாச பெரியவரோ சற்றும் பதற்றமின்றி எரிந்து போன சமித்து குச்சியின் சாம்பலை வாயால் ஊத, அது காற்றில் கரைந்துப்போயிற்று.
ஏழ்மை, அவமானத்தை தாங்க முடியாமல் தற்கொலை செய்ய முயற்சிக்கிறார் ராமேஷ்வரய்யர். அவர் மூழ்க எத்தனிக்கும் போது திடீரென சிரிப்பு சத்தம் கேட்கிறது. நிமிர்ந்து பார்த்தால் அது நரசிம்மாச்சாரியார். அவருக்கு வேதம் பாடம் சொல்லிக்கொடுத்தவர். அன்னதான மடத்திலிருந்த அதே சந்நியாச பெரியவர்!
இருவரும் நிரம்ப நேரம் வீடு திரும்பும்போது, ஒரு போலீஸ்காரர் வருகிறார். அவர்கள் ஏதோ தவறான காரியங்களைச் செய்யவதாக நினைத்துக்கொண்டு அவமரியாதையாக பேசுகிறார். நரசிம்மாச்சாரியாரின் மூட்டை கண்ணில் பட, அவர் அதை மறைக்க முயல, போலீஸ்காரரின் சந்தேகம் வலுப்படுகிறது. இருவரையும் தள்ளிவிட்டு மூட்டையைத் திறக்க, “அதில் யந்திரங்கள் இருப்பதாகவும், தவறான வேளையில் பார்த்தால் பேராபத்து விளையும், போய் தடு” என நரசிம்மாச்சாரியார ஐயரிடம் அலறுகிறார். காலம் கடந்திருக்கவே, வானத்தில் திடீரென இடி இடிக்க, மின்னல் தாக்கி அந்த போலீஸ்காரர் கரிகட்டையாக விழுந்தார். வெலவெலத்துப்போனார் ஐயர்.
ஐயரின் ஏழ்மையைப் போக்க, சந்நியாசி குபேர யந்திரத்தை தருகிறார். சகல சம்பத்துகளும் வந்த பிறகு, யந்திரத்தை தானே திரும்பவும் வாங்கி கொள்வதாகசொல்கிறார். யந்திரத்தை பூஜிக்கும் ஐயருக்கு ஜாக்பாட்டில் 1 கோடி விழுகிறது! ஏழ்மை விலகி குபேர சம்பத்து அடையும் ஐயர் அந்த யந்திரத்தால்தான் இவை அனைத்தும் சாத்தியம் என பத்தரிக்கைக்குப் பேட்டியளிக்கிறார். அதை திருட பிரபல நீதிபதி, ஐயரின் மகன் கிட்டா முலம் முயலுகிறார். சந்நியாசியோ யந்திரத்தைக் கேட்டு திரும்பவும் வருகிறார்.
- கிட்டாவின் முலம் யந்திரம் நீதிபதியின் கைக்குப் போனதா?
- யந்திரத்தைக் கேட்டு திரும்பி வந்த சந்நியாசியிடம் ஐயர் அதை கொடுத்தாரா? கொடுக்க முற்பட்டாலும் வீட்டில் உள்ள யந்திரம் அசலா? போலியா?
- யந்திரத்தால் குபேரனாகி விடமுடியுமா?
இந்த கேள்விகளுக்கு பதில் “ யந்திர ஜாலத்தில்”. மறக்காம வாங்கி படிங்க!