எழுத்தாளர் : முத்துலட்சுமி ராகவன்
பெற்றோர் இறந்தவுடன் குடும்ப சொத்தின் முழு பொறுப்பையும் ராதிகா ஏற்றுக்கொள்கிறாள். குடும்ப பொறுப்பில் முழுமையாக ஈடுபட்டிருக்கும் ராதிகா பிற சிந்தனைகள் இல்லாமல் இருக்கிறாள். அண்ணன் நவநீதன் தன் நண்பன் அரவிந்தனை வீட்டில் தங்க வைக்க அழைத்து வருகிறான்.
அரவிந்தன் வீட்டில் தங்குவதை முதலில் விரும்பாத ராதிகா அண்ணனிடம் கோபம் கொள்கிறாள். பிறகு மெல்ல அரவிந்தனிடம் காதல் வயப்படுகிறாள். அவனோ செல்வ செழிப்புடன் இருக்கும் ராதிகாவிடம் தன் காதலைச் சொல்ல தயங்குகிறான்.
ஒரு மழை இரவில் இருவரும் காதலை வெளிப்படுத்திக்கொள்ள ஒருவர் மீது ஒருவர் கொண்டிருக்கும் அன்பை உணர்கிறார்கள்.முதல் வேலையாக, அரவிந்தன் நண்பன் நவநீதனிடம் தன் உள்ளகிடங்கைச் சொல்லி ராதிகாவை பெண் கேட்கிறான். நவநீதனோ தான் நினைத்த காரியம் நிறைவேறிவிட்டதாக குதுகூலமடைகிறான். அரவிந்தனை தன் வீட்டிற்கு அழைத்து வந்ததின் முக்கிய காரணமே இதுதான் என்று உண்மையை சொல்கிறான்.
ஒருநாள் அரவிந்தன் ஒரு பெண்ணோடு வரவும் , ராதிகா அவர்களை தவறாக நினைத்துவிடுகிறாள். அந்த பெண்தான் தன் வருங்கால அண்ணி அனுபமா என தெரியாமல் அரவிந்தனை கண்டப்படி பேசிவிடுகிறாள்.அரவிந்தனோ அந்த வீட்டை காலி செய்துவிடுகிறாள். பிறகு உண்மை தெரியவும் அனுபமா தான் செய்த தவறை எண்ணி மனம் வருந்த , தற்கொலைக்கு முயற்சிக்கிறாள்.
- மருத்துவமனையில் சாகக்கிடக்கும் ராதிகா உயிர் பிழைத்தாளா?
- அவளை மன்னித்து அரவிந்தன் மீண்டும் ஏற்றுக்கொண்டானா?
இந்த மனஸ்தாபங்களைக் கடந்து அரவிந்தன் ராதிகா எவ்வாறு இணைந்தனர் என்பதே முகில் மறைத்த நிலவு!