எழுத்தாளர்: பெருமாள் முருகன்
பிள்ளை பேறின்றி தவிக்கும் தம்பதிகளின் தவிப்பும் அவர்களின் சந்திக்கும் அவமானங்களையும் போராட்டங்களையும் இந்த நாவல் எடுத்துரைக்கிறது. காளிக்கும் பொன்னாளுக்கும் திருமணம் ஆகி 12 வருடங்கள் முடிந்திருந்தது. தான் நட்டு வைக்கும் பூ மரங்களும் பழ மரங்களும் பூத்து குலுங்க தனக்கு மட்டும் ஏன் இந்த நிலை என மனம் நொந்து போகிறாள் பொண்ணா.

அவர்கள் செய்யாத பரிகாரங்கள் இல்லை. யார் எந்த வழிப்பாட்டைச் செய்ய சொன்னாலும் அதை உடனே செய்து முடித்து விடுவார்கள். இப்படி செய்தால் கடவுள் அவர்கள் பிராத்தனைக்குச் செவி சாய்த்து பிள்ளை வரம் குடுத்து விட மாட்டாரா எனும் நம்பிக்கை, இல்லை இல்லை நப்பாசை.
பொன்னா எந்த விசேஷ காரியங்களுக்கும் செல்வதில்லை. அங்கே அவள் சந்தித்த சொல்பேச்சுகளும் அவமானங்களும் அப்படி. காளிக்கு இன்னொரு பெண் பார்க்கலாம் என பேச்சு எழவும் துடித்துப்போகிறாள் பொண்ணா. அப்படி ஒன்று நடந்தால் தன்னைப் பிணமாகத்தான் பார்க்க நேரிடும் என சொல்கிறாள்.
காளிக்கோ பொன்னாளின் இடத்தில் மற்றோரு பெண்ணை வைத்து பார்க்கக்கூட மனமில்லை. ஊரில் சொல்கிறபடி வேறொரு பெண்ணை மணந்து அவளுக்கும் பிள்ளை இல்லை என்றால் அந்த பாவம் நமக்குத்தான் வரும் என யோசித்து மறுமணம் வேண்டாம் என மறுத்துவிடுகிறான்.
ஊரிலும் சொந்தத்திலும் பிள்ளை இல்லை காளி பொன்னாளின் சொத்து , அவர்களின் காலத்திற்குப் பிறகு நமது பிள்ளைகளுக்கு வராத என நினைக்கவும் ஆரம்பித்து விட்டார்கள். ஆனால் காளியும் பொன்னாளும் தமக்கு குழந்தை பாக்கியம் நிச்சயம் கிடைக்கும் என உறுதியாக நம்புகிறார்கள்.
இடையில் பொன்னாளின் தாய் ஒரு யோசனையோடு பொன்னாளின் மாமியாருடன் கலந்துரையாடுகிறாள். அவர்கள் போட்ட திட்டம் என்ன? குழந்தைப் பேறுக்காக தாய் சொன்ன விதிமீறல் திட்டத்தால் இத்தம்பதியனர் வரவிருக்கும் சிக்கல்களை எதிர்கொள்வார்களா?