எழுத்தாளர்: இந்திரா சௌந்தர்ராஜன்
மருந்தின் தாக்கத்தால் மகள் படுத்திருக்க ஆனந்தனும் மனைவி லட்சுமியும் அவளை பார்த்தப்பபடியே இருக்கின்றனர். பெயரில்தான் ஆனந்தமும் லட்சுமியும், ஆனால் நிஜத்தில் இல்லை. 12 வயது பிஞ்சுக்கு இதுவரை கண்டுப்பிடித்திராத ஒரு நோய். மருந்தும் இல்லை செலவு செய்ய பணமும் இல்லை. மூன்று மாத வாடகை பாக்கி, குடியிருக்கும் வீட்டிற்கு. நாளை பணம் தராவிட்டால் வீட்டை விட்டு வெளியேற வேண்டிய நிலைமை.
விபூதி தாத்தா கொடுத்திருந்த பஞ்சாமிர்தத்தில் சயனைடு விஷத்தைக் கலந்து அதை சாப்பிட்டுவிட்டு இறந்து போக முடிவு செய்திருந்தனர் ஆனந்தனும் லட்சுமியும். சயனைடு கலந்திருந்த பஞ்சாமிர்தத்தைப் பவித்ராவுக்கு ஊட்டிவிட்டு இருவரும் மீதத்தை அருந்தினர். அப்போது பார்த்து ஒரு குடுகுடுப்பைக்காரன் வரவே “நல்ல காலம் பொறக்குது நல்ல காலம் பொறக்குது” என கூறிவிட்டு செல்ல ஆனந்தனக்கோ ஆத்திரம் பொங்குகிறது.
சிறிது நேரம் சென்று பஞ்சாமிர்தம் அருந்திய குழந்தை பவித்ரா எழுந்து உட்காருகிறாள். தந்தையிடம் “செஸ் விளையாடலாமா பா” என, வினவ ஆனந்தனும் லட்சுமியும் அதிர்ச்சி அடைகிறார்கள். எப்பொழுதும் சோர்ந்து போகும் குழந்தை இப்பொழுது எப்படி உற்சாகமாக இருக்கிறாள்? அதுவும் விஷத்தை அருந்திய பிறகு? அவர்கள் இருவருக்கும் கூட ஒன்றும் ஆகவில்லையே.
மறுநாள் காலையிலே ஆனந்தன் பவித்ராவை டாக்டரிடம் அழைத்து செல்ல அவரும் வியந்து போகிறார். பவித்ராவின் உடலில் நோய் கிருமிகளின் சுடவே தெரியவில்லை எனவும் அவர்கள் அருந்தியது நிச்சயம் சயனைடு தான் என உறுதி படுத்துகிறார். விபூதி தாத்தா கொடுத்த பஞ்சாமிர்தத்தில் தான் ஏதோ மருந்து இருக்க வேண்டும் அதனால் அவரை அழைத்து வாருங்கள் என சொல்கிறார் டாக்டர்.
ஆனந்தன் வீடு திரும்ப, வீட்டு உரிமையாளர் தற்போதுதான் வந்து போனதாகவும் நேற்றிரவு நாம் தற்கொலை செய்வது போல் அவர் கனவு கண்டதாகவும் வீட்டு வாடகையை மெதுவாக கொடுங்கள் என சொல்லிவிட்டு போனதாக விவரிக்கிறாள் லட்சுமி. ஆனந்தனும் விபூதி தாத்தாவைத் தேடி செல்ல, அவரோ சதுரகிரி மலைக்குச் சென்று விட்டதாக அறிகிறான்.
வீட்டிற்குத் திரும்பவும் குழந்தை நோய் வந்தது போல் படுத்துக்கொள்ள மீண்டும் நோய் கிருமியின் தாக்கமாக இருக்கலாம் என டாக்டர் சொல்கிறார். மருந்து விபூதி தாத்தாவிடமே இருக்கிறது என எண்ணி, ஆனந்தனும் அவரைத் தேடி சதுரகிரி மலைக்குப் புறப்படுகிறான்.
சித்தர்களின் சித்துகளையும் மர்மங்களும் மேலும் தெரிந்துக் கொள்ள பாஷாண லிங்கம் புதினத்தை நாடுங்கள்! |