அந்த மனிதருக்கு தன் வீடு தோட்டத்தைப் பார்க்கும் போதெல்லாம் ஒரு தனி பெருமிதம்தான். பச்சை பசேலென இருந்த புல்வெளி அந்த இடத்துக்கே ஒரு தனி அழகை சேர்த்தது. ஒரு முறை அலுவல் காரணமாக வெளியூர் சென்று வந்திருந்த அவர், அந்த புல்வெளியில் அளவுக்கடந்த டான்டேலின் செடிகள் வளர்ந்திருப்பதைக் கண்டார்.
அந்த களைச் செடிகளைக் களைய அவருக்கு தெரிந்த எல்லா வழிமுறைகளையும் கையாண்டார். ஆனால் அந்த முயற்சிகள் தோல்விகளையேச் சந்தித்தன. எதை செய்தாலும் அதற்கு போட்டியாக டான்டேலின் செடிகள் மீண்டும் மீண்டும் செழிப்பாகவே வளர்ந்து தோட்டத்து புல்வெளியை நிரப்பியிருந்தன.
அலுத்துப்போய், அவர் வேளாண்மைத்துறைக்கு ஒரு கடிதம் எழுதினார். அதில் தான் இதுவரை கையாண்ட எல்லா வழிகளை விவரித்து “அடுத்து நான் என்ன செய்வது” என கேட்டிருந்தார்.
வேளாண்மைத்துறையிடமிருந்து பதில் விரைவிலே வந்தது: “நீங்கள் டான்டேலியன்களை நேசிக்க கற்றுக்கொள்ளுங்கள் என பரிந்துரைக்கிறோம்”.
#சிந்தனைத் துளி
- உங்கள் எல்லைகளையும் வரம்புகளையும் அறிந்துகொள்வதுதான் அவைகளைக் கையாள்வதின் முதல் படி என்பதை நீங்கள் அறிவீர்களா?