எழுத்தாளர்: ரமணிசந்திரன்
மேகலை என்ற மணிமேகலை போராடி நன்றாக படித்து நந்தன் தாவெர்ஸில் நேர்முக தேர்வுக்குச் செல்கிறாள். அவள் அங்கே வேலைக்குச் செல்வதற்கு ஒரு மறைமுக காரணமும் இருந்தது. அதுதான் நந்தன் என்ற அந்த நந்தகுமாரைப் பழிவாங்குவது.
புத்திசாலியான திறமையான அவளை நந்தனே வேலைக்குத் தேர்வு செய்கிறான். அழகு அறிவும் மிகுந்த அவளிடம் ஈர்க்கப்படுகிறான். எட்டு வருடங்களுக்கு பிறகு சந்திக்கும் நந்தகுமாரன் , இந்நேரம் தொப்பை வழுக்கை விழுந்து நடுந்தர வயது கடந்தவன் போல் இருப்பான் என மேகலை எதிர்பார்க்க , அவனோ ஆளை அசத்தும் வசீகரத்தில் இருந்தான்.
நந்தனின் நிறுவனத்திற்கும் சிங்காரி சோப்பு தூள் நிறுவனத்திற்கும் இடையே போட்டி நிலவுவதை மேகலை வேளையில் சேர்ந்த சில காலத்திலே அறிந்திருந்தாள். நந்தனும் அவளை நம்ப ஆரம்பித்திருந்தான். சோப்பு தூளின் போர்முலாவை யாரும் அறியாமல் ஒரு பிரதி எடுத்து அலமாரியில் வைத்துவிடுகிறாள்.
நந்தனைப் பழிவாங்க அந்த சோப்பு பிரதியை போட்டி கம்பெனியிடம் கொடுத்து விட வேண்டும் என முடிவு செய்கிறாள். சிங்காரி சோப்பு தூளின் நிறுவனர் ஷிவாதான் அம்மாவைக் கைவிட்ட தன் தந்தை என மேகலைக்குத் தெரிய வருகிறது. போட்டி கம்பெனியிடம் சோப்பு தூள் போர்முலாவின் பிரதியைக் கொடுக்கும் திட்டதைக் கைவிடுகிறாள்.
வேறு எதாவது ஒரு போட்டி கம்பெனியிடம் கொடுக்கலாம் என நினைத்தால் , நந்தன் ஏழை மாணவர்களுக்குக் கொடுக்கும் உதவி தொகை ரத்தாகிவிடுமே என எண்ணி அந்த எண்ணத்தையும் கைவிடுகிறாள். இவனை வேறு ஒரு வழியில்தான் பழிவாங்க வேண்டும் என யோசிக்கிறாள்.
இந்த நிலையில் , தன்னை மணக்க கோரி மேகலையிடம் நந்தன் கேட்கிறான். அவனைப் பழிவாங்க அதுவே சந்தர்ப்பம் என எண்ணி திருமணத்திற்குச் சம்மதிக்கிறாள்.
மேகலை நந்தனைப் பழிவாங்க துடிக்கும் காரணம் என்ன?
திருமணத்திற்குப் பிறகு மேகலையின் மனம் மாறியதா?