எழுத்தாளர்: முத்துலட்சுமி ராகவன்
குடும்ப பகையை முன்னிட்டு தினகரன் சித்ரலேகாவை விரும்புவது போல் நடிக்கிறான். ஆனால் உண்மையில் காதலித்தும் விடுகிறான். திருமண நாளன்று தாலி கட்டியபிறகு, சித்ராவின் தந்தையும் அண்ணன் சித்தார்த்தனும், தன் தந்தை மற்றும் அக்காள் கணவன் ஜெகன் காலில் விழுந்து மன்னிப்பு கேட்டால்தான் சித்ராவை தன் வீட்டுக்கு அழைத்து செல்வேன் என கூறி அனைவரையும் திகைக்க வைக்கிறான்.
தனக்காக அப்பாவும் அண்ணனும் சுயமரியாதையை இழக்க வேண்டாமென, சித்ரா தினகரனை வேண்டாம் என புறக்கணித்துச் செல்கிறாள். தினகரனின் தாயோ அவனிடம் பேச மறுக்கிறார். இப்படியே 15 மாதங்கள் கடந்துவிட்டிருந்தது.
தினகரன் வேலை செய்யும் அலுவகத்தில் சித்ராவும் வேலைக்கு அமர்கிறாள். அங்கே அவனை புதிய நிமிர்வுடன் சித்ரா எதிர்கொள்கிறாள். தினகரனோ அவளின் பிரிவு தரும் வேதனையில் தினமும் மறுகுகிறான். இடையில் தினகரன் காய்ச்சலில் விழ, பணிவிடை செய்ய சித்ரா அவன் வீட்டிற்குச் செல்கிறாள். பிறகு, நான்கு மாதங்களுக்கு இது தொடர்கிறது.
இடையில் ஒரு நாள், சித்ராவிடமிருந்து மருந்துவ விடுமுறை கடிதம் வரவே, பதறுகிறான் தினகரன். அவள் தங்கிருந்த அவளின் தாய்மாமா வீட்டிற்கு ஓடோடி வருகிறான். சித்ரா தாய்மை அடைந்திருக்கும் விவரம் தெரியவருகிறது. ஆனால், தான் கருவுற்றிக்கும் நிலையினால், எங்கே தன் குடும்பத்தார் தினகரன் குடும்பத்திடம் மன்னிப்பு கேட்டுவிடுவார்களோ என பயந்து சித்ரா சென்னை சென்றுவிட்டதை அவள் அத்தையின் முலம் அறிய, செய்வதறியாமல் திகைக்கிறான் தினகரன்.
- சித்ரா தினகரனின் குடும்பங்களுக்கு இடையே நிலவும் பூசல்களுக்குக் காரணமென்ன?
இவர்களின் குடும்பப் பகைக்கு தீர்வு பிறந்ததா?
