எழுத்தாளர் :முத்துலட்சுமி ராகவன்
கதையின் நாயகன் பார்த்திபனுக்கும் நாயகி காயத்திரிக்கும் திடீர் திருமணம் நிச்சயிக்க படுகிறது. தன் சம்மதத்தைக் கேட்காமலே திருமண ஏற்பாட என காயத்திரி கோபமடைகிறாள். பார்த்திபனோ அவளை ஏற்கனவே பெண் கேட்டு வந்த அரவிந்தனைக் காயத்திரி காதலிக்கிறாள் அவனை நினைத்து நினைத்து மருகுகிறாள் என தவறாக புரிந்துகொள்கிறான்.
இந்த தவறான புரிதலால் , திருமண நடந்த பிறகும் ஒரு வருட காலத்திற்கு பிரிந்தே வாழ்கிறார்கள். ஊரில் ஜல்லிக்கட்டு ஏற்பாடு நடக்க , பார்த்திபனை காளை தவறுதலாக முட்ட வர காயத்திரி குறுக்கே புகுந்து அதை தாங்கி கொள்கிறாள். மனைவி தன் மீது கொண்டுள்ள அன்பைப் புரிந்து , அவளிடம் தன் காதலை பார்த்திபன் வெளிப்படுத்துகிறான்.
காயத்திரி தாய்மை அடைய , சீமந்தம் நடக்கிறது. சீமந்தம் முடிந்து காயத்திரியின் தாய் வீட்டிற்கு அவளை பிரியமுடியாமல் பார்த்திபனும் வருகிறான். அங்கே அரவிந்தனைக் கண்டு வெறுப்படைகிறான்.
காயத்திரிக்கு பிரசவ வலி எடுக்க , வெளியிலோ கலவரம். சரியான நேரத்தில் அரவிந்தன் அவளை மருத்துவமனைக்கு அழைத்து செல்கிறான். குழந்தை பிறந்த பிறகு, அங்கே வரும் பார்த்திபன் , அரவிந்தன் காயத்திரிக்கு இடையிலான உரையாடலை தவறாக புரிந்து கொள்கிறான். பார்த்திபன் அவளை புறக்கணிக்க , காயத்திரி என்ன நடந்தறியாமல் முழிக்கிறாள்.
i) கணவன் தன்னை புறக்கணிக்கும் காரணத்தைக் காயத்திரி தெரிந்துகொண்டாளா?
ii) காயத்திரி அரவிந்தனை அண்ணனைப் போல் பாவிக்கிறாள் என்பதை பார்த்திபன் புரிந்துக்க்கொண்டானா? இந்த மன வேற்றுமைகளைக் கடந்து பார்த்திபன் , காயத்திரி எவ்வாறு மறுபடியும் இணைந்தனர் என்பதே நிலா வெளியில்! |
---|