எழுத்தாளர்: உமா பாலகுமார்

அம்மா சியாமளாவுக்கு கேரளாவுக்கு வேலை மாற்றலாகிவிட , சௌமியா தாயுடன் கேரளா செல்கிறாள். ஹோட்டல் மேனேஜ்மென்ட் படித்த சௌமியா வேலை தேட , விதுரனின் ஹோட்டலில் வேலைக்கு அமர்கிறாள். நாட்கள் செல்ல இருவரும் காதல் வயப்படுகிறார்கள்.
தன் காதல் விஷயத்தைத் தந்தையிடம் சொல்ல எத்தனிக்கும் போது சியாமளா தான் தன் அன்னை என்ற உண்மை தெரியவர அதிர்ந்து போகிறான். தந்தையின் மூலம் தன் தாய் சியாமளா நடத்தை சரியில்லாதவர் என்றும் தெரிய வர ஆத்திரமடைகிறான்.
தான் உயிருக்கு உயிராக காதலித்த சௌமியாவை தங்கை என நினைக்க முடியாமல் தவிக்கிறான் விதுரன். நாட்கள் செல்ல , ஆத்திரத்தை அடைக்க முடியாமல் , சியாமளாவை விதுரன் தவறாக பேசிவிடுகிறான்.
விதுரன் பேசியதைக் கேட்டு கோபமடையும் சௌமியா , சியாமளாவிடம் உண்மையைச் சொல்லும்படி நிர்பந்திக்கிறாள். சியாமளா உண்மையைச் சொல்ல , இவை அனைத்துக்கும் விதுரனின் தந்தை வித்யாதரனின் பார்ட்னர்தான் காரணம் என தெரியவருகிறது.
விதுரன் , சௌமியா இந்த குழப்பங்களைக் கடந்து எப்படி இணைந்தார்கள் என்பதே நினைத்து மறுகுதடி நெஞ்சம்! |