எழுத்தாளர்: கலைவாணி சொக்கலிங்கம்
விதவையான அக்காவுக்கு அப்பாவின் நண்பர் மகன் கண்ணனை மணமுடித்து வைக்க வேண்டும் என பாட்டிக்கு தாதியாக செல்கிறாள் மீரா. அங்கே கண்ணனின் அண்ணன் ராதாகிருஷ்ணன் ராதாவை விரும்பியவன் என தெரிய வருகிறது. அப்பாவின் சம்மதம் கேட்க செல்ல ஏற்கனவே திருமணம் நிச்சயம் ஆகி விட்டதால் கல்யாணம் செய்யாமலே ஒதுங்கிறான் என அறிந்துகொள்கிறாள் மீரா.

ரௌடிகள் தொந்தரவு செய்ய மிரண்டு போன ராதாவுக்கு ராதாகிருஷ்ணன் தைரியம் சொல்லி கண்ணனும் அவனும் ரௌடிகளை நையப் புடைக்கிறார்கள். பிறகு ராதாகிருஷ்ணன் ராதாவின் திருமணத்துக்கு சம்மதமும் வாங்கி விடுகிறார்கள்.
கண்ணனின் தங்கை பாரதியின் வருங்கால கணவன் கௌதமின் தம்பி கிஷோர் மீராவை பெண் கேட்க , கண்ணன் தன் காதலை விட்டு கொடுக்கிறான். கண்ணனின் காதலை கிஷோர் அறிய , அவர்களை சேர்ந்து வைக்க நாடகமாடுகிறான்.
ஆனால் விளைவு வேறு விதமாகி “என்னை ஆளாளுக்கு பந்தாட வேண்டாம்” என கூறிவிட்டு , கண்ணன் சந்திக்க , தொடர்பு கொள்ள முயற்சிக்கும் போதெல்லாம் மறுத்துவிடுகிறாள்.
கண்ணனும் மீராவும் பிறகு எவ்வாறு இணைந்தனர் என்பதே மீதி கதை. படித்து மகிழுங்கள் நினைக்காத நேரமில்லை.