தொலை தூர வெளிச்சம் நீ! (Tholai Thoora Velicham Nee!)

எழுத்தாளர்: லட்சுமி சுதா

கதையின் நாயகி தர்ஷினி கல்லூரித் தோழன் பிரமோத்தின் வேண்டுகோளுக்கு இணங்கி அவனைக் காண ஆவலுடன் அந்தமானுக்குப் பயணிக்கிறாள். ஆனால் அங்கே சென்ற பிறகு , பிரமோத்தின் அண்ணன் சாம்ராஜ் அவளைக் கடத்தி வைக்கிறான்.

காரணம் புரியாமல் தர்ஷினி வினவ , தனது தம்பியின் நிச்சயதார்த்தம் முடியும் வரை அவள் அங்குதான் இருக்கவேண்டும் என நிர்பந்திக்கிறான். பிரமோத் தாங்கள் இருவரும் காதலர்கள் என்று சொல்லி வைத்திருக்கிறான் என தெரிய வர , தர்ஷினி அதை மறுக்கிறாள்.பணக் கஷ்டத்தில் இருக்கும் காதலி நேத்ராவைத் திருமணம் செய்து கொள்ளதான் அண்ணன் சாம்ராஜிடம் தானும் தர்ஷினியும் விரும்புவதாக நாடகமாடியதைச் சொல்கிறான்.

Photo by http://scribd.com/

நிச்சயதார்த்த இரவில் அனைவரும் பெண் வீட்டிற்கு சென்றுவிட , சாம்ராஜும் தரிஷினியும் வீட்டில் தனியாக இருக்கிறார்கள். பிரமோத் தன்னிடம் சொன்னது அனைத்தும் பொய் என்று தனக்கு தெரியும் என கூறி , அவனிடம் தன் காதலைச் சாம்ராஜ் வெளிப்படுத்துகிறான்.

சாம்ராஜ் மீது தர்ஷினி காதல் வயப் பட்டிருந்தாலும் , அவன் பணக்காரன் என்பதால் விலகுகிறாள். அவனுக்கு தெரியாமல் தர்ஷினி சென்னைக்குத் திரும்புகிறாள்.

தர்ஷினியைக் காணாமல் தவிக்கும் சாம்ராஜின் அடுத்த கட்ட நடவடிக்கை என்ன?

இந்த மன பேதமைகளைக் கடந்து சாம்ராஜ் , தர்சினி எவ்வாறு ஒன்று சேர்ந்தனர் என்பதே தொலை தூர வெளிச்சம் நீ!

close
LET’S KEEP IN TOUCH!

We’d love to keep you updated with the latest posts and stories😎

We don’t spam! Read our privacy policy for more info.

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

EnglishTamil