எழுத்தாளர்: முத்துலட்சுமி ராகவன்
பெரியம்மா அகிலாண்டேஸ்வரியின் ஆதிக்கத்தில் ஆட்டுவிக்கப் படுகின்றனர் இளமதியும் சுவாதியும். அத்தை மகனான இளஞ்செழியனை இளமதி காதலிக்கிறாள்.இதை அறிந்த பெரியம்மா ஏழை, அதிகம் படிக்காத கோவிந்தனுக்கு மணமுடித்துக் கொடுக்கிறாள்.
மனதுக்கு பிடிக்காத கணவனுடன் சேராமல் கடமைக்காக வாழ்கிறாள் இளமதி. தங்கை சுவாதியைப் பெரியம்மா அகிலாண்டம், சொந்தத்தில் கெட்டவன் ஒருவனுக்கு மணமுடித்துக் கொடுக்க முடிவெடுக்கவும் அதிர்ந்து போகிறாள்.
செய்வதறியாமல் விழிக்க, பிறகு தங்கையைக் காப்பாற்ற இளஞ்செழியனின் உதவியை நாடுகிறாள். தனது தாய் மற்றும் இளமதியின் வற்புறுத்தலால், கடமைக்காக சுவதியை மணந்துக் கொள்கிறான். ஆறு வருடங்களாக கணவனுடன் சேராமல், மனத்தால் பிரிந்தே வாழும் இளமதி, தங்கையின் பிரச்சனையைக் களைய உதவிய கோவிந்தனின் செய்கையால், அவன் மீது காதல் கொள்கிறாள்.
- இளஞ்செழியன் + சுவாதி இடையே உள்ள மன வேறுபாடு தீர்ந்ததா?
- பெரியம்மா அகிலாண்டேஸ்வரியின் நிலை என்ன?
இந்த பிரச்சினைகளைக் கடந்து கோவிந்தன் + இளமதி மற்றும் இளஞ்செழியன் + சுவாதி ஜோடிகள் எப்படி இணைந்தனர் என்பதே “ தொடுவானம்”.