எழுத்தாளர்: ராஜேஷ்குமார் (Rajeshkumar)
யமுனா சின்ன சின்ன விளம்பர படங்களில் நடிக்கும் ஒரு அழகான இளம்பெண். காதலன் திவாகர் சொன்ன சர்வதேச விளம்பர கம்பனியின் ஒப்பந்தத்தில் நடிக்க ஒப்புக்கொள்கிறாள். ஆனால் விளம்பர கம்பனி முதலாளி சந்திரசேகரும் திவாகரும் நயவஞ்சகமாக யமுனாவை ஆபாச காணொளியில் நடிக்க வைக்க திட்டமிடுகிறார்கள். காதலன் என்கிற போர்வையில் கயவன்!
இந்த உண்மையை சொல்ல முற்படும் சந்திரசேகரின் செயலாளர் சரளா மர்மான முறையில் கொலை செய்யப்படுகிறாள். திவாகரும் சந்திரசேகரும் பேசுவதை ஒரு அதிர்ஷ்ட்டவசமாக கேட்டுவிடும் யமுனா, லாவகமாக தப்பித்துவிடுகிறாள். தப்பித்த அவள், தன்னுடன் ஒரே வீட்டில் தங்கிருக்கும் தோழி சந்தியாவிற்கு போன்செய்து, மனிதஉரிமை commission தலைவி காயத்திரிதேவியைச் சந்திக்க போவதாக சொல்கிறாள் (சந்தியாவும் பணத்தாசையால் சந்திரசேகருடன் கூட்டுசேர்த்துவிட்டாள் என்பதை அறியாமல்)…
உதவி செய்யும் போர்வையில் யமுனாவை மீண்டும் திவாகரின் பிடியில் சிக்க வைக்க, சந்தியா உடன் செல்கிறாள். காயத்திரிதேவியோ சுய ஆதாயதிற்காக யமுனாவை போலீஸிடம் சிக்கவைக்கிறாள். காவல்துறை உங்கள் நண்பன் என்பது பொதுமொழி ஆனால் இங்கோ அது சந்திரசேகரின் கையாள்.
இடையில் சந்தியா கொலைசெய்யப்பட, பழி யமுனா மீது விழுகிறது. இப்படி திரும்புமிடமெல்லாம் எதிரிகளும் துரோகிகளும். தப்பிக்க வழிதெரியாமல் இக்கட்டான சூழ்நிலையில் யமுனா தவிக்கிறாள். மீண்டும் மாட்டிக்கொண்டால் இழிவான படுகுழியில் நிச்சயம் தள்ளபடுவள். ஆனால் உதவிக்கு யாரும் இல்லாத அவலநிலை.
- இந்த பிரச்சனைகளிருந்து தன் மானதிற்கு எந்தவொரு இழுக்கு வராமல் யமுனா தப்பித்தாளா?
- பெண்களுக்கு எதிராக அநியாயம் இழைக்கும் கூட்டத்தின் கொட்டம் அழிந்ததா?
- யார் இந்த திலகா?
ஒரு கட்டத்துலே ” என்னடா இந்த கதையிலே யாருமே நல்லவங்க இல்லையா?”-ன்னு படிக்கும்போது கண்டிப்பா தோணும்.
இந்த புத்தகம் படிக்கும் போதே நெஞ்சுதுடிப்பு அதிகமாகி, அடுத்து என்ன நடக்கபோகுதுன்னு ஒரே படபடப்பு.உயிருக்கு உயிரா பழகனவங்க துரோகம் ஒரு புறம், உதவிகேட்டு போன இடத்தில ஏமாற்றம் மறுபுறம். யமுனாவோட நிலைமை எந்த பெண்ணுக்கும் வரகூடாது.
இந்த திக் திக் நொடிகளை நீங்களும் அனுபவிக்க மறக்காம ராஜேஷ்குமாரின் திக் திக் திலகா புத்தகத்தை வாங்கி படிங்க!