எழுத்தாளர்: கலைவாணி சொக்கலிங்கம்
கதையின் ஹீரோ ஸ்ரீதரன் தந்தை மறு கல்யாணம் செய்ததால் அவரை வெறுத்து வீட்டை விட்டு வெளியேறுகிறான். வீட்டை விட்டு வெளியேறிய ஸ்ரீ பெண்களைக் கண்டாலே வெறுக்கிறான். பாறையில் படுத்திருந்தவனை கதையின் நாயகி ஜெயஸ்ரீ எழுப்ப , ஸ்ரீயோ ஆத்திரத்தில் கத்துகிறான்.

அங்கிருந்து ஜெய் வெளியேற , அவளை ஒரு விஷப்பூச்சி கடித்துவிடுகிறது. ஜெய்க்கு உதவி செய்ய போக , அங்கே ஜெய்யின் அண்ணனாக தன் தோழன் மதனைக் காண்கிறான். ஸ்ரீ மதன் வீட்டிலே தங்கிக்கொள்ள , மெல்ல மெல்ல இயல்புக்கு திரும்புகிறான். மதன் மற்றும் ஜெய்யின் அப்பா வீட்டை விட்டு ஓடிவிட்டதை அறிந்துக் கொள்கிறான். பெண்களின் மீதிருந்த வெறுப்பு நீங்க , ஜெய்யைத் திருமணம் புரிய விழைகிறான்.
ஜெய் ஸ்ரீயை அவன் தந்தை கங்காதரனுடன் இணைக்க முயற்சி எடுக்கிறாள். தந்தையை மருத்துவமனைக்கு அழைத்து செல்லும் வழியில் அடிப்பட்டு கர்ப்பப்பையை இழந்து அனைவராலும் ஒதுக்கப்பட்டு தற்கொலை செய்யவிருந்த யமுனாவைத் தந்தை திருமணம் செய்தார் என அறிந்ததும் தன் தவறை எண்ணி பதறிப்போகிறான் ஸ்ரீதரன்.
ஸ்ரீதரன் , ஜெய்ஸ்ரீ இணை குடும்பத்தோடு எப்படி இணைந்தனர் என்பதே மீதிக்கதை! கண்ணெதிரே தோன்றினாள் நிச்சயம் வசீகரிக்கும்.