எழுத்தாளர்: முத்துலட்சுமி ராகவன்
தீபலட்சுமியின் தாயாரான ஜானகி தாய் மாமாவான மோகனரங்கத்தைத் திருமணம் புரியாமல் தான் காதலித்த கோதண்டராமனை மணந்துக் கொள்கிறார். இதனால் மோகனரங்கத்தின் தங்கை மேகலா தன் அண்ணனை மணக்க மறுத்த ஜானகியை வெறுக்கிறார்.
கதையின் நாயகன் பார்த்திபன் தனது கிராமத்தில் ஆசிரியராக பணிப்புரியும் தீபாவைக் கபடிப்போட்டியில் சந்திக்க, இருவரும் மனதைப் பறிகொடுக்கிறார்கள். அடிக்கடி ஒற்றையடிப் பாதையில் அவளை சந்திக்கிறான்.

பார்த்திபனின் அத்தை மகளின் திருமணத்தில் மேகலாதான் அவனின் அம்மா என தீபாவிற்கு தெரியவருகிறது.மகனின் காதல் விவகாரம் தெரிய வர, மேகலா தீபாவைத் தவறாக பேசிவிடுகிறார். இடையில் புகுந்து பார்த்திபன் சமாதானம் செய்ய முயல, தீபாவோ தன் காதலை தூக்கி எறிகிறாள். அதான் பின் எவ்வளவு பேசியும் சமாதானம் செய்ய முயன்றும் தீபா பிடிவாதமாக இருக்கிறாள். செய்வதரியாமல் திகைக்கும் பார்த்திபன், இறுதியில் தன் தந்தையிடம் ஆலோசனை கேட்கிறான்.
பார்த்திபனின் தந்தை தீபாவிடம் பேச, மேகலா வீட்டுக்கு பெண் கேட்டு வந்தால்தான் தன் மனக்காயம் ஆறும் என்று தீப சொல்கிறாள். இதை எல்லாம் கடந்து பார்த்திபன், தீபலட்சுமி இருவரும் எவ்வாறு இணைகிறார்கள் என்பதே ” ஒற்றையடிப் பாதையிலே”. அதன்பின் இறுதியில் ஜானகி + கோதண்டராமன், பார்த்திபன் + தீபலட்சுமியின் காதலைப் பார்த்திருந்த ஒற்றையடிப் பாதை, தீபாவின் தம்பி ரகுராமன் + பார்த்திபனின் தங்கை பாரதியின் காதலையும் பார்க்க ஆரம்பித்திருந்ததை miss பண்ணாம படிங்க!