எழுத்தாளர்: இந்திரா சௌந்தர்ராஜன்
மனைவி கோமளம் இறந்திருக்க பத்மநாபன் மூன்று பெண் குழந்தைகளையுடன் வாழ்ந்து வரும் ஒரு தொழிலதிபர். வீட்டில் அவர்களுடன் அவரின் அம்மா அம்முனி மற்றும் மாப்பிள்ளை கிடைக்காமல் இருக்கும் தங்கை கல்யாணி. இந்த நிலையில் அவரை தேடி வருகிறாள் ரங்கநாயகி. தன்னை தவறானவள் என காட்டிக்கொள்ளும் ரங்கநாயகி , மனைவி கோமளத்தை நினைவூட்டுவதை எண்ணி குழப்பமடைகிறார் பத்மநாபன். அவரிடம் அவள் பேச முயற்சிக்க அவரோ அவளை விரட்டி விடுகிறார்.
இந்த நிலையில் கல்யாணியைப் பெண் கேட்டு ஸ்ரீகாந்த் வர வரதச்சனை கூட வாங்காத பெருந்தன்மை படைத்த அவனை கண்டு உச்சி குளிர்ந்து போகிறார் அம்முனி. ரங்கநாயகி தவறானவள் இல்லை என நண்பன் சான்றிதழ் கொடுக்க பத்மநாபன் அதிர்ச்சியாக பார்க்கிறார். ரங்கநாயகி பத்மநாபனிடம் பேச வந்த காரணத்தைக் கண்டறிய சொல்கிறான்.

அன்றைய இரவில் ஒரு மனிதன் ரங்கநாயகின் பக்கத்து வீட்டில் நுழைகிறான். அவனை யார் என்று தேசிகாச்சாரி நோக்க வந்தவன் ஸ்ரீகாந்த். ஸ்ரீகாந்த்தைக் கண்டு ஆத்திரத்தில் கொதிக்கிறார் அவர். ரங்கநாயகி பத்மநாபனை சந்திக்க முயற்சிப்பதை நிறுத்தி கொள்ளவேண்டும்; இல்லை என்றால் தன்னிடம் இருக்கும் துருப்பு சீட்டை பயன்படுத்த நேரிடும் என எச்சரிக்கிறான் அவன்.
ஆத்திரத்தில் ரங்கநாயகியின் தம்பி கோவிந்த் அரிவாள் எடுத்து வர ரங்கநாயகி அதை தடுக்க அரிவாளை கீழே போடுகிறான். நடந்த களேபரத்தில் தேசிகாச்சாரியின் மகள் கௌசிக்கு வலிப்பு வர அவள் கீழே கிடந்த அரிவாள் விரைகிறார்கள் விழ ஆழமான காயம் படுகிறது. ரங்கநாயகியும் தேசிகாச்சாரியும் அவளை எடுத்துக் கொண்டு மருத்துவனை விரைகிறார்கள். அதே சமயத்தில் பத்மநாபனின் கார் அவர்களின் வீட்டின் முன்னே!
மருத்துவனையில் தன்னை ஸ்ரீகாந்த் தான் கொலை செய்தான் என வாக்குமூலம் கொடுத்து விட்டு கௌசி இறந்து போகிறாள். பத்மநாபன் நடந்தை தேசிகாச்சாரியிடம் விசாரிக்க ஸ்ரீகாந்த் ஒரு மனநோயாளி எனவும் ஊர் ஊராக சென்று பல பெண்களை ஏமாற்றி திருமணம் செய்யபவன் என தெரிய வரவும் விதிர்விதிர்த்து போகிறார். அவனால் பாதிக்க பட்டவர்களில் கௌசியும் ரங்கநாயகியும் அடங்குவர். தங்கை கல்யாணியின் வாழ்வு பாழாக இருந்ததை எண்ணி துடிக்கிறார். ரங்கநாயகி ஸ்ரீகாந்தை போலீசில் மாற்றிவிடாமல் திருத்த முயலுகிறான் என தெரியவர மேலும் குழப்பமடைகிறார் பத்மநாபன்.
மரண வாக்குமூலம் இருக்க ஸ்ரீகாந்த் போலீசிடம் பிடிபட்டனா? அவனை திருத்த முயலும் ரங்கநாயகி வெற்றி பெற்றாளா ?
மனைவியை இழந்து தவிக்கும் பத்மநாபன், தாயை இழந்து தவிக்கும் குழந்தைகளுக்கு ரங்கநாயகி வாழ்வளிப்பாளா? தமிழக அரசின் சிறந்த நாவலுக்கான பரிசு பெற்ற நாவல் இது. என் பெயர் ரங்கநாயகி,வாசிக்க தவறிவிடாதீர்கள்! |
---|