எழுத்தாளர்: ராஜேஷ்குமார்
ஹேமாவுக்குத் திருமணம் நிச்சயம் ஆகியிருக்க கணவன் இருக்கும் ஊருக்கே வேலை மாற்றலாகி செல்ல முயற்சி செய்துகொண்டிருந்தாள். அப்பா தனுஷ்கோடியின் அறிவுரையின்படி MLA கார்மேகத்தைக் காண செல்கிறார்கள். MLA கார்மேகத்தின் தப்பான பார்வை ஹேமாவின் மீது விழுகிறது.
ஹேமாவுக்கு வேலை மாற்றலாகி செல்ல தான் உதவுவதாக வாக்களிக்கிறார். தனுஷ்கோடியைக் காகிதங்கள் வாங்க கடைக்கு அனுப்பிவிட்டு ஹேமாவிடம் தனியாக பேச முயல்கிறார். அவர் அடுத்த முயற்சி எடுக்கும் முன் தனுஷ்கோடி காகிதங்களுடன் வந்து விடவே ஹேமா ஆறுதல் அடைகிறாள்.
கார்மேகத்தின் பார்வையே சரியில்லை என ஹேமா கூற தனுசுகோடியோ நம்ப மறுத்துவிடுகிறார். ஹேமா வேலை இடம் மாற்றலாகி செல்லும் மனுவை எழுத ஆரம்பிக்க , வேலையாள் இருவரும் அருந்த குளிர்பானம் எடுத்து வருகிறான். குளிர்பானத்தை மிடறு விழுங்கிவிட்டு எழுத தொடர ஹேமாவுக்கு தலை சுற்றுகிறது. அருகில் இருந்த அப்பா தனுசுகோடியும் மயங்கி விழுந்திருப்பதைக் கண்டு அதிர்ந்து போகிறாள்.
தன்னிலை மறந்து மயங்கி விழும் ஹேமா சிறிது நேரம் கழிந்து எழவும் தனது ஆடைகள் கலையப்பட்டிருப்பதை உணர்கிறாள். அருகிலோ MLA கார்மேகம். தனக்கு நடந்திருக்கும் அநியாயத்தைக் கண்டு ஆத்திரமடைகிறாள் ஹேமா. தந்தை தடுத்தும் காவல் நிலையத்துக்குச் சென்று MLA கார்மேகத்தின் மீது புகார் கொடுக்கிறாள்.
இன்ஸ்பெக்டர் சந்திரகுமாரும் சப் இன்ஸ்பெக்டர் ராஜேந்திரனும் , புகரைக் வாங்கிக்கொள்ள அதே சமயத்தில் ஹேமாவின் தந்தை தனுஷ்கோடி காவல் நிலையத்திற்குள் நுழைகிறார். அவர் தற்கொலை செய்யப்போவதாக மிரட்டவே புகாரைத் திரும்பவும் பெற்றுக்கொள்கிறாள் ஹேமா. ஆனால் மறுநாள் காலையில் தனுஷ்கோடி ரூமின் கதவைத் திறக்க அங்கே தூக்கில் தொங்கியபடி பிணமாக ஹேமா…
இன்ஸ்பெக்டர் சந்திரகுமாருக்கு மலை கார்மேகத்திடமிருந்து போன் வரவே அவரின் வீட்டிற்கு விரைகிறார். மலை கார்மேகம் தனக்கு கொலை மிரட்டல் கடிதம் வந்திருப்பதாவும் , அதில் ரத்த வெள்ளத்தில் இருக்கும் ஹேமா என்கிற பெயரைக் காட்ட அதிர்ந்து போகிறார் இன்ஸ்பெக்டர். இறந்து போன ஹேமா எப்படி கொலை மிரட்டல் விடுத்திருக்க முடியும்?
மீதி எங்கும் ஹேமா எதிலும் ஹேமாவில்.. படிக்க தவறாதீர்கள்….