எழுத்தாளர்: ரமணிசந்திரன்
ஐந்து வயதிலே தாய் தந்தையரை இழந்திருந்த மஞ்சரியை யோகனின் தந்தை எடுத்து வளர்க்கிறார். தன்னுடன் அன்புடன் நடந்துகொள்ளும் யோகனிடமும் அவனின் தாய் திலகத்திடமும் தானாகவே ஒட்டிக்கொள்கிறாள். வருடங்கள் கடந்தோடுகிறது. யோகனின் தந்தை இறந்தவுடன் , யோகனே மஞ்சரியின் கார்டியனாக ஆகிறான். அவளின் ஒவ்வொரு தேவைகளையும் கவனித்து கொள்கிறான்.
இந்த நிலையில் , சுனாமி கேம்ப்பிற்கு செல்லும் மஞ்சரி சிவநேசனைச் சந்திக்கிறாள். அவனின் மீது காதல் வயப்படுகிறாள். இந்த விஷயத்தை யோகனிடம் சொல்லவேண்டும் என ஆர்வத்துடன் வீட்டிற்கு வருகிறாள். தான் செல்வனேசனைச் சந்தித்ததும் இருவரும் காதலிக்கும் விவரத்தையும் அவனிடம் சொல்கிறாள்.
அவள் சொல்வதை கேட்டுக்கொண்டு சலனமில்லாமல் இருக்கிறான் யோகன். செல்வனேசனைச் சந்திக்க சாம்மதம் தெரிவிக்க , மறுநாளே செல்வனேசன் வருகிறான். இருவரும் தனியாக பேசவேண்டும் என சொல்லிவிட்டு மஞ்சரியை வெளியே போக சொல்கிறான் யோகன்.
இருவரும் பேசி முடித்ததும் , வருகிற அவளது இருபதாவது பிறந்தநாளின் போது திருமண அறிவிப்பு செய்யலாம் என யோகன் சொல்லவும் உற்சாகமாகிறாள் மஞ்சரி. பிறந்தநாள் நெருங்குகையில் , சிவநேசன் மஞ்சரியைச் சந்தித்து தனி பிளாட் வாங்க பணம் கேட்கிறான். மஞ்சரியோ தன் பெயரில் பணமில்லை எனவும் அணைத்தும் யோகனின் தந்தை சம்பாதித்தது என உண்மையைச் சொல்லவும் அதிர்ச்சிக்குள்ளாகிறான் சிவநேசன்.
அதிரிச்சியில் , பணதிக்காகத்தானே அவளைக் காதலித்த உண்மையை உளறிவிட , அதிர்ந்து போகிறாள் மஞ்சரி. அந்த நேரத்தில் யோகன் வரவும் , அவனின் தோள் மீது சாய்ந்து அழுகிறாள். இந்த நிலைமையைச் சமாளிக்க இருவரும் மணந்துகொள்ளலாம் என யோகன் கூற , அவனது காதலி அனிதாவை மறக்கவும் தான் சிவநேசனை மறக்கவும் தான் இந்த யோசனை என நினைத்து திருமணத்துக்குச் சம்மதிக்கிறாள்.
திருமணத்துக்கு பிறகு , எதேச்சையாக தோழி ரதியைச் சந்திக்கிறாள். அங்கே அவளை மணக்க போகும் மாப்பிள்ளையாக சிவநேசன்! இந்த திருமணத்தை மஞ்சரி தடுத்து நிறுத்துவாளா? இதனால் நடக்க போகும் விபரீதம் என்ன? யோகனின் மனதை மஞ்சரி அறிந்துகொள்வாளா?