எழுத்தாளர்: முத்துலட்சுமி ராகவன்

மஞ்சரி மருத்துவமனையில் தாதியாக பணிபுரிகிறாள். குடும்ப வைர நகைகளை மீட்டுக் கொண்டு வரும் வழியில் அர்ஜுன் விபத்துக்குள்ளாகிறான். விபத்தைக் கண்ட மஞ்சரி அவனை ரங்கனின் உதவியுடன் காப்பற்றி மருத்துவமனையில் சேர்கிறாள். அவன் வைத்திருந்த நகைகளையும் பொருட்களையும் மீட்கிறாள்.
தன்னையும் காப்பாற்றி விலைமதிப்பில்லாத நகைகளையும் மீட்ட மஞ்சரின் மீது காதல் வயப்படுகிறான் அர்ஜுன். உடைநிலை சரியான பிறகு , அவளிடம் தன் காதலைச் வெளிப்படுத்துகிறான். அவனை நேசித்தாலும் , அனாதையான தன்னை பணக்காரனான அர்ஜுன் காதலிப்பது சரிவராது என்று அவனை மறுக்கிறாள்.
சற்றும் மனம் தளராத அர்ஜுன் , பெரிய டாக்டரின் உதவியோடு அவனின் அம்மாவிற்கு பணிவிடை செய்யும் தாதியாக வரவழைக்கிறான். மஞ்சரின் கவனிப்பில் மரகதம் அம்மாள் மெதுமெதுவாக குணமடைகிறார்.
இந்த நிலையில் அர்ஜுனின் அத்தை மகள் நிஷா அவனின் வீட்டிற்கு வருகிறாள். அர்ஜுன் மஞ்சரின் மேல் ஈர்க்கப்பட்டிருப்பதைத் தெளிவாக தெரியவே மஞ்சரின் மீது பொறாமைப்படுகிறாள். ஒரு கட்டத்தில் நிஷா வார்த்தையால் நோகடிக்கவே , ஆத்திரத்தில் மஞ்சரி அவளை அறைந்துவிடுகிறாள். அதே கோபத்தில் , வினித்திடம் தன்னை திருமணம் செய்து கொள்ள தயாரா என கேட்டுவிட, அது அர்ஜுனின் காதில் விழுகிறது.
இந்த மனக்குழப்பங்களைக் கடந்து அர்ஜுன், மஞ்சரி எவ்வாறு இணைந்தனர் என்பதே உன் மனதை தந்துவிடு. |