எழுத்தாளர்: வித்யா சுப்ரமணியம்
அருணாவின் பெற்றோர் சிறுவயதிலே விபத்தில் இறந்துவிட தன் தம்பியின் பெண் குழந்தையான அவளை பெரியப்பா தாமோதரன் எடுத்து வளர்க்கிறார். மனைவி வேணி இதை எதிர்க்க , அவளைக் அடக்கி அருணாவும் நமக்கு ஜானகியைப் போல இன்னொரு பெண் குழந்தைதான் என சொல்லி புரியவைக்கிறார்.
தன் தம்பி விருப்பப்படியே அருணாவை டாக்டருக்கு படிக்க வைக்கிறார். தம்பியும் தம்பி மனைவியும் விட்டு சென்ற பணத்தை அருணாவின் பேரில் டெபாசிட் செய்து வைக்கிறார். மனைவி வேணி அந்த பணத்தை நமது பிள்ளைகளுக்கும் உபயோகிக்கிலாம் என சொல்லவும் ஆத்திரமடையும் தாமோதரன் அவளைக் கண்டிக்கிறார்.

மெடிக்கல் காலேஜ் செல்லும் அருணா அங்கே அசோக்கைச் சந்திக்கிறாள். இருவரும் பழக ஆரம்பிக்க இறுதியில் காதல் வயப் படுகிறார்கள். ஆனால் தன் பெற்றோர் மற்றும் பெரியப்பாவின் ஆசைப்படி தான் ஒரு மருத்துவராகும் வரை பிற காதலர்களைப் போல ஊர் சுற்றாமல் கண்ணியமாக நடந்து கொள்ளவேண்டும் என அருணா வேண்டுகோள் விடுக்க அசோக்கும் அவளின் கருத்தை ஆமோதிக்கிறான்.
காதலைப் பற்றி பேச்சு எழ பெரியப்பா தனது முன்னாள் காதலியைப் பற்றி நினைத்து பார்க்கிறார். தனது அப்பாவின் உடல்நிலை காரணமாக தன் காதலைத் துறந்து வேணியைத் திருமணம் செய்யவேண்டிய நிர்பந்தத்தை நினைத்துப் பார்க்கிறார். தன் காதலியே தம்பியின் மனைவியாக ஆகவேண்டிய விதியின் விளையாட்டை நினைவு கூர்கிறார்.
இந்த நிலையில் , அசோக் அருணாவைச் சந்தித்து ஒரு மருத்துவனைக் கட்ட அவளின் பணத்தை எதிர்பார்ப்பதைச் சொல்கிறான். அருணாவிற்கோ அவன் பணத்தைக் கேட்பது பிடிக்காமல் , பணத்திற்கு உரிமை கொண்டாடுவதாக நினைக்கிறாள்.
பெருந்தன்மையும் இறக்க குணமும் கொண்ட அருணாவின் வாழ்கை எப்படி அமையப்போகிறது என்பதே உன்னிடம் மயங்குகிறேன்…