எழுத்தாளர்: உமா பாலகுமார்
சிறு வயதில் தனது அண்டை வீட்டில் இருந்த நரேனின் மீது மையல் கொள்கிறாள் நித்திலா. இடையில் அப்பாவுக்கு மாற்றலாகி விட , அவனைக் காணாமல் தவிக்கிறாள் நித்திலா. இப்படியே பல ஆண்டுகள் உருண்டோடுகின்றன. தோழி தாரா திருமணத்துக்கு அழைப்பிதழ் வைக்க அவளின் திருமணத்திற்கு செல்கிறாள்.
அங்கே நரேந்திரனைத் தோழி ராதாவின் மணமகனாக காண்கிறாள். கவலையை மறைத்து கொண்டு நடமாடுகிறாள். தாரா அவள் காதலிலத்தவனை திருமணம் செய்ய , நித்திலாவோ மணமகளாக நிறுத்தப்படுகிறாள். திருமணம் முடிந்து நரேன் நாம் நண்பர்களாகவே இருக்கலாம் என கூறுகிறான்.
நாட்கள் நகர நரேன் மெல்ல மெல்ல நித்திலா மேல் ஈர்க்கப்படுகிறான். ஆனால் விந்தியாவின் பிரச்சனையால் அவன் நித்திலாவிடம் கடுமையாக பேசிவிடுகிறான். பிறகு உண்மையை அறிந்து அவளை சமாதானப்படுத்த முயல , அவளோ விலகுகிறாள்.
இந்த மன பேதங்களைக் கடந்து நரேந்திரன் நித்திலா எப்படி இணைந்தனர் என்பதே உனக்கெனத் தவமிருந்தேன்.