எழுத்தாளர் : ராஜேஷ்குமார் (Rajesh Kumar)
எழுத்து உலகத்துலே crime, thriller, புலன் விசாரணை-னா நமக்கு முதலே நினைவுக்கு வரது, திரு ராஜேஷ்குமார் அவர்கள் தான். அவரது “Seventh Test Tube” சிறுகதை கல்கண்டு பத்திரிகையிலே பிரசுரம் ஆனதிலிருந்து, இதுவரைக்கும் 1500 நாவலும், 2000-க்கும் மேல்பட்ட சிறுகதை எழுதியிருக்கார். Vivek and Rupala என்கிற characters இவரது துப்பறியும் கதைகள்லே பிரதானம்; வாசகர்கள் கண்டிப்பா miss பண்ணவே முடியாது. இப்போ கதைக்குள்ளே போலாமா?
“கருட பார்வை” பத்திரிகையிலே வேலை செய்யும் நிருபர் குமரன் ஊர்லே இருக்கிற மனைவியை பார்க்க இரவு நேர பஸ்ஸில் பிரயாணம் செய்கிறான். திருப்பத்தூர் railway கேட் junction கிட்ட பஸ் நிக்க, இயற்கை உபாதை காரணமா குமரன் பஸ்ஸிலிருந்து கீழே இறங்குகிறான். குப்பை மண்டி கிடந்த இடத்தில் எதேச்சையாக திடமான எதோ ஒன்று காலில் பட, குனிந்து பார்க்கும்போது அங்கே கணுக்கால்வரை வெட்டப்பட்ட ஒரு மனித கால்!
அதிர்ச்சியில் உறைந்துபோன குமரன், குப்பை கூளமும், பிளாஸ்டிக் பையும் நிறைந்த இடத்தில் துண்டு துண்டாக வெட்டப்பட்டு கிடந்த மனித உடலை பற்றி போலீசிடம் தகவல் சொல்ல முடிவெடுக்கிறான். போலீஸிடம் சொன்ன தேவையில்லாத பிரச்னை வரும்-னு பஸ் டிரைவரும் conductor-உம் பயபட்டாலும், குமரன் புகார் பண்ணுவேன்னு பிடிவாதமா இருக்காரு. தன்னோட பத்திரிக்கை தர்மத்துக்கு புறம்பாக போக விரும்பாமல், காட்ரூர் போலீஸ் இன்ஸ்பெக்டர் கலிவர்தனிடம் பார்த்ததை சொல்கிறான். அவர் ஊழல்வாதியான உயர் அதிகாரிடம் சொல்ல, அவரோ முக்கிய புள்ளிகள் சம்பந்த பட்டிருந்தா காசு கரக்கலாம்ன்னு திட்டம் போடறார். அது வரைக்கும் குமரன் station-லே நிருத்திவைக்கப்படறான்.
இந்த கதை தடம் ஒரு பக்க ஓட, வேறுஒரு கதை தடமும் இந்த நாவலே வருது. தமிழ் வாத்தியார் மணிவாசகத்துக்கு 3 பெண்கள். ஆளும் கட்சி அமைச்சர் ஜோதி மாணிக்கம், அவருடைய மகன் குணசீலன், மணிவாசகத்துடைய கடைசி மகள் மேல ஆசைபட்றதால கல்யாணம் பண்ணிக்க சொல்லி torture பண்றார். பயந்துபோன வாத்தியார் போலீஸ் DSP மகேந்திரகுமார்கிட்ட உதவி கேக்கறாரு. அமைச்சரின் அடியாள்கள் கொடுத்த மயக்க மருந்து சுவாசிச்சு மகேந்திரகுமார் Coma நிலைக்கு போய்றாரு. கல்யாணத்துக்கு சம்மதிக்க மறுக்கும் மேகாவோ குணசீலணால் கடத்தபடுகிறாள்.
- போலீஸ் station-லே இருக்கும் குமரனின் நிலை என்ன?
- வெட்டபட்டு கிடந்த மனித உடல் யாருடையது?ஆணா இல்லை பெண்ணா?
- மேகாவின் நிலை என்ன? யார் அந்த இறந்து கிடந்த தென்றல்?
இரண்டு கதை தடங்களை வைத்து கதை எழுதுவதில் திரு ராஜேஷ்குமாருக்கு நிகர் அவரேதான். இருவேறு தடங்களும் ஒரு கட்டத்தில் ஒன்றிணையும்போது நிச்சயம் ஆச்சரியத்துக்கு குறைவிருக்காது.
ஆச்சரியம் அடைய “இறந்து கிடந்த தென்றல்” புத்தகத்தை கண்டிப்பா வாங்கி படிங்க.