எழுத்தாளர்: ராஜேஷ் குமார்
பிரேம் Pharmaceuticals நிறுவனர் பிரேமை பேட்டி காண பத்திரிக்கை நிருபர் லயா அவன் ஜாகிங் செய்யும் இடத்தில் காத்துக்கொண்டிருக்கிறாள். முதலில் அதை கண்டிக்கும் பிரேம், பிறகு பேட்டி கொடுக்க ஒத்துக்கொள்கிறான். இன்றே பெட்டி எடுக்க வேண்டும் என லயா வற்புறுத்த, பிரேமின் வீட்டுக்கு செல்கிறார்கள். கேட்டின் கதவை திறக்க லயா முயல, கையில் பிசுபிசுப்பாய் ஒட்டிக்கொண்ட உலர்ந்தும் உலராத இரத்தம்! பிரேம் அதை அருகில் தங்கிருக்கும் நாடோடிகள் அடிக்கடி மிரட்டத்தலுக்காக செய்த வேலை எனவும் அது முயலின் இரத்தம் என சொல்கிறான். உடனே காவல் துறைக்கு தனது கைபேசியில் அழைத்து புகார் அளிக்கிறான்.
பேட்டியை தொடரும் முன் குளித்து விட்டு வருவதாக பிரேம் மாடிக்கு செல்ல, லயாவோ ஹாலில் காத்திருக்கிறாள். மாடிக்கு சென்ற பிரேம் அங்கே இருக்கும் தந்தையிடம் இன்று யார் தப்பிக்க பார்த்தது என கேட்கவும், மனோகரிதான் தப்பிக்க பார்த்தாள், அவளை தடுப்பதற்காக காயப்படுத்திவிட, கேட்டில் அவள் ரத்தம் தெரிந்துவிட்டிருக்கலாம் என அவன் தந்தை ஜோதி மாணிக்கம் சொல்கிறார்.

ஹாலில் இருக்கும் லயாவைக் காண்பித்து, நம்மை வேவு பார்க்க வந்திருக்கிறாள் எனவும் அவளை லேபில் பரிசோதனை எலியாக உபயோகப்படுத்தலாம் என பிரேம் அவரிடம் ஒரு குரூரத்துடன் சொல்கிறான். பிறகு பிரேம் கீழே இறங்கவும், பேட்டி தொடரும்போது லயாவுக்கு அசிஸ்டன்ட் போலீஸ் Commissioner உத்தண்டராமன் போன் செய்கிறார். ஒரு கொலை வழக்கில் சாட்சியனா லயாவை விசாரணைக்கு வர சொல்ல, அவளோ இப்போது ஒரு VIP-யை பேட்டி எடுத்துக்கொண்டிருப்பதாவாகவும் உடனே வர முடியாது எனவும் அதட்டலாக பதிலளித்து கை பேசியை அணைக்கிறாள்.
பேட்டி எடுத்துக்கொண்டே வீட்டின் பின்புறம் இருக்கும் லேப்க்கு இருவரும் செல்கிறார்கள். லேபில் எச்சரிக்கை மணி அடித்த ஒரு இயந்திரத்தைச் சரிபார்க்க பிரேம் செல்ல, அந்த கதவின் இடுக்கின் வழியே பார்த்த லயாவின் உடம்பில் மின்சாரம் பாய்ந்தது போல் ஓர் அதிர்வு. அங்கே பரிசோதனைக்காக ஒரு பெண்ணின் உடல் கிடத்தப் பட்டிருப்பதைக் காணவும் எச்சரிக்கையாகிறாள் லயா! ஆனால், தப்பிக்க முயலும் லயாவை பிரேமும் ஜோதி மாணிக்கமும் தலையில் தாக்கவே மூர்ச்சையாகி விழுகிறாள்.
லயா இறந்துவிட்டதாக நினைத்து அவளின் உடலை புதைக்க ஊரை தாண்டி ஒரு சவுக்கு தோப்பில் புதைக்க எடுத்து செல்கிறான். அங்கே வினித் + நந்தினி என்ற காதல் ஜோடி வரவும், உடலை அங்கேயே போட்டுவிட்டு ஓடுகிறான் பிரேம். சத்தத்தைக் கேட்டும் பின்தொடரும் வினித், பிரேம் காரின் நம்பர் பிளேட்டை பார்த்துவிடுகிறான்.
லயாவிடம் இன்னும் நாடி துடிப்பு இருக்கவே, பொது தொலைபேசியில் அம்புலன்ஸ்க்கு தகவல் சொல்லிவிட்டு அந்த இடத்தை காலி செய்கின்றனர். அதே வேளையில் காலையில் சென்ற லயாவை காணாமல் அவள் காதலன் மகாதேவன் பத்திரிக்கை எடிட்டர் ராம் மோகனுடன் லயாவை தேட ஆரம்பிக்கிறான். லயாவின் டைரி போலீசில் சிக்க, அதில் அன்று பேட்டி காண போகும் பிரமுகரின் initial RR என எழுதியிருக்க, போலீசின் பார்வை அரசியல்வாதி ராயப்பனிடம் திரும்புகிறது. போலீஸ் அவரிடம் விசாரித்து விட்டு செல்லவும், தன் கையாளிடம் தன்னை பற்றி பத்திரிகையில் எழுதி குடைச்சல் கொடுக்கும் லயாவை சாயங்காலம் மணிக்குள் கண்டுபிடித்து, அவள் கதையை முடித்துவிடும்படி உத்தரவிடுகிறார்.
பிரேம் நடந்தை ஜோதி மாணிக்கத்திடம் கூறுகிறான். வரும் வழியில் , ஆம்புலன்ஸ் சென்றதையும் லயா உயிரோடு இருப்பதையும் சொல்கிறான். அப்போது அவன் செய்த குற்றத்தை பற்றி தனக்கு தெரியும் எனவும் போலீசில் சொல்லாமல் இருக்க பணம் கேட்டு பிளாக்மெயில் போன் கால் வருகிறது. அவனிடமே மருத்துவமனையில் இருக்கும் லயாவை முடித்துவிடும்படியாக பிரேம் பேரம் பேசி, முன் பணம் கொடுக்க செல்ல, அந்த காரில் வினித் இறந்துகிடக்கிறான்.
பிறகு போலீஸ், பிரேமை அவன் அளித்த போலி மருந்து புகார் தொடர்பான விசாரணைக்கு அழைக்க, திரும்பி வந்தவனின் காரில் அவனின் காதலி சுவேதா! உங்களை இன்று யாராவது பத்திரிக்கை நிருபர் சந்திக்க வந்தார்களா? லயாவை தெரியுமா என சுவேதா கேட்கவும் வெலவெலத்துப்போகிறான் பிரேம்!!!
- தலைக்கு மேல் கத்திகள் தொங்கிக்கொண்டிருக்க மருத்துவமனையில் அபாய கட்டத்தில் இருக்கும் லயா கண்விழித்தளா? உண்மை போலிசுக்கு தெரியவந்ததா?
- சட்டத்துக்கு புறம்பாக செயல்படும் பிரேமும் ஜோதிமணிக்கமும் போலீசிடம் பிடிப்பட்டனரா?வினித்தைக் கொன்றது யார்?
- பிரேமை லயா சந்தித்ததை யாரும் பார்த்திராத நிலையில், லயாவைப் பற்றி சுவேதாவும் எப்படித்தெரியும்?
- இரும்பு பட்டாம்பூச்சிகளுக்கும் லயாவுக்கும் உள்ள சம்பந்தம் என்ன?
கட்டாயம் வாங்கி படிக்கவேண்டிய ராஜேஷ்குமாரின் மற்றுமொரு அருமையான படைப்பு. இரும்பு பட்டாம்பூச்சிகள் திருப்பதின் உச்சம்.