எழுத்தாளர்: ராஜேஷ்குமார்
மும்பையில் வேலை செய்யும் கல்பனா அண்ணன் அண்ணியைப் பார்க்க சென்னை வருகிறாள். தன்னை கூட்டிச் செல்ல அண்ணன் இன்னும் வராததால் ரயில் நிலையத்திலே காத்திருக்கிறாள். வழியில் ரயில் நிலையத்தில் தன் தோழி பாவ்யவைச் சந்திக்கிறாள். கல்பனாவின் அண்ணனை காணததால், பாவ்யாவும் கல்பனாவுடன் வீட்டிற்கு துணையாக வருகிறாள்.
வீடோ பூட்டி இருக்க, அண்ணன் அண்ணியை காணாமல் இருவரும் குழம்புகிறார்கள். வீட்டின் முன்புறம் வெட்டப்பட்ட விரல் ஒன்றை கண்டு பவ்யா அதிர்ச்சியடைகிறாள். வீட்டின் ஒவ்வொரு அறையாக சென்று பார்க்கும் கல்பனா பீரோவின் கதவு லேசாய் திறந்து இருப்பதை பார்த்துவிட்டு அதை மூட நினைத்து கதவைத்திறக்க, அங்கே ஓர் இறந்து கிடந்த இளைஞனின் உடல்.
இறந்தவனின் முக அடையாளமும் புலப்படவில்லை. செய்வதறியாமல் இருவரும் முழிக்க, பிறகு போலீசிடம் சொல்ல முடிவெடுக்கிறார்கள். இதற்கிடையில் கல்பனாவின் அண்ணன் போன் செய்து தான் வெளியூரில் இருப்பதாகவும், விரைவில் திரும்பிவிடுவதாகவும், வந்த பிறகு அனைத்தையும் விவரிப்பதாக போன் செய்து கூறுகிறார். மேலும் வீட்டின் முன்புறம் இருந்த அந்த துண்டிக்கப்பட்ட விரலோ மர்மான மாயமாகி இருந்தது.
- வீட்டிற்கு யாரும் வந்திராத நிலையில் அந்த விரல் எப்படி மாயமானது?
- கல்பனாவின் அண்ணன் அண்ணி என்னவானர்கள்?
- பிரோவில் இறந்து கிடந்த இளைஞன் யார்?
அமாவாசை ராத்திரியில் ரத்த பலிகொடுத்து பணக்காரர்கள் ஆகிவிடலாம் என்ற நம்பிக்கையை ஒட்டி செல்லும் இந்த “இரவு நேர வானவில்லை” கண்டிப்பாக படிங்கள். விறுவிறுப்புக்கு குறைவிருக்காது!