எழுத்தளார்: ராஜேஷ்குமார்
கிருஷ்ண சந்தரும் திரைப்பட இயக்குனருமான பிரசன்னாவும் பந்தயம் போட்டுக்கொள்கிறார்கள். பிரசன்னா கொலை செய்தவன் சட்டத்தின் பிடியிலிருந்து தப்பிக்க முடியாது. கண்டிப்பாக போலீசிடம் மாட்டிக்கொள்வான் என சொல்கிறான்.
கிருஷ்ண சந்தரோ சாதூர்யமாக செயல்பட்டால் சட்டத்தின் பிடியிலிருந்து தப்பிக்க முடியும். நான் ஒரு கொலை செய்கிறேன். தான் போலீசிடம் மாட்டாமல் தப்பித்து விட்டால் பிரசன்னாவின் சொத்து முழுவதும் தனக்கு சொந்தமாகும் எனவும் மீறி பிடிபட்டால் அவன் சொத்தை பிரசன்னாவிற்கு எழுதி வைப்பதாகவும் பந்தயம் வைக்கிறான்.
பந்தயத்தின் படி தனக்கு பிடிக்காத மனைவி அஞ்சலாவைக் கொலை செய்யப்போவதாக சொல்கிறான். முதலில் தயங்கும் பிரசன்னா பிறகு ஒப்புக்கொள்கிறான். கார்டியாக் மானிட்டர் கருவின் மூலம் அஞ்சலாவிற்கு தான் மாரடைப்பு வரவைக்கப்போவதாக தன் காதலி பவித்ராவிடம் சொல்கிறான். தூக்க மாத்திரை மருந்தை ஜூஸில் கலந்து அஞ்சலாவை தூங்க வைத்துவிட, கார்டியாக் மானிட்டரை இயக்க முயல வாசலில் சத்தம் கேட்கிறது.
வாசலில் அஞ்சலாவின் தோழி மைதிலி. அஞ்சலா மாரடைப்பில்தான் இறந்து போனால் என்பதுக்கு சாட்சியாக சரியான நேரத்தில்தான் இவள் வந்திருக்கிறாள். நாளை போலீசின் பார்வை தன் பக்கம் திரும்பாது என மகிழ்கிறான் கிருஷ்ண சந்தர். மைதிலி அறைக்குள் சென்றதும் மறுபடியும் கார்டியாக் மானிட்டரை ஆன் செய்ய, அதில் உயிர் இல்லை. அதை சரி செய்ய முயலும்போது, தொழிற்சாலையில் தொழிலாளர்கள் இடையே மோதல் என செய்தி வர கிருஷ்ணா சந்தர் அங்கு விரைகிறான்.
மறுநாள் காலையில் அஞ்சலாவும் மைதிலியும் கொடைக்கானல் புறப்பட, அஞ்சலாவை கொலை செய்ய அடுத்த முயற்சியாக அவள் சூட்கேஸில் டைம்போம் வைக்கிறான். ரயில் நிலையத்தில் இருவரையும் வழி அனுப்பி விட்டு செய்திக்கு ஆவலுடன் காத்திருக்க, சூட்கேஸ் திருடப்பட்டு விட்டதாகவும், உடைகளை அனுப்பும்படி செய்தி வரவே அதிர்ந்து போகிறான். அஞ்சலா தான் வைக்கும் குறியிலிருந்து தப்புகிறாளே என எரிச்சல் அடைகிறான் கிருஷ்ண சந்தர்.
இந்த நிலையில் அஞ்சலாவின் உடல் நிலை சரியில்லை என போன் வர, கிருஷ்ண சந்தர் கொடைக்கானல் விரைகிறான். அவனை வர வைப்பதற்காக மைதிலி பொய் சொல்லி இருக்க, அஞ்சலாவின் கதையைக் கொடைக்கானல்லேயே முடித்துவிட நினைக்கிறான். கிருஷ்ண சந்தர் “பவித்ரா” என தூக்கத்தில் உளறுவதை கேட்டிருந்த மைதிலி அவன்தான் சூட்கேஸில் டைம்போம் வைத்திருக்க வேண்டும் என சந்தேகப்படுகிறாள். உண்மையைத் தெரிந்து கொண்ட மைதிலியைக் கழுத்து நெரித்து கொலை செய்துவிட்டு, அவள் கால் தவறி மலை உச்சியிலிருந்து விழுந்து விட்டாள் என கதை கட்டுகிறான் கிருஷ்ண சந்தர்.
பிறகு அஞ்சலாவைக் கொலை செய்ய வாய்ப்புக்காக காத்திருக்க, நண்பன் திலீப் அவனை தேடி வருகிறான். அவன் கொண்டு வந்திருந்த பாம்பு விஷம் கலந்த புட்டியைத் திருடி அஞ்சலா அருந்தும் டோனிக் போத்தலில் அந்த விஷயத்தை கலந்து விடுகிறான்.
அஞ்சலாவின் தங்கை வசந்தாவை வீட்டிற்கு வர வைத்துவிட்டு, வியாபாரம் டீல் ஒன்று பேசப்போவதாக கூறி 10 நாட்களுக்கு மும்பை சென்று விடுகிறான். தினமும் போன் செய்து நலம் விசாரிப்பது போல் பேசி, டோனிக்கை அருந்துமாறு வலியுறுத்துகிறான்.
நாளைக்கு நாள் உடல் நிலை குன்றி போகும் அஞ்சலா, விஷத்தின் தாக்கத்தால் உயிர் இழக்கிறாள். தன் திட்டம் நிறைவேறியதை எண்ணி குதுகூலமடையும் கிருஷ்ண சந்தர், தான் ஊரில் இல்லாததால் போலீசின் சந்தேகம் தன் மேல் விழாது என தைரியமாக இருக்கிறான். அன்றாடம் டோனிக் அருந்துமாறு வற்புறுத்திய கிருஷ்ண சந்தரின் மேல் வசந்தாவுக்கு சந்தேகம் மேலிட, போலீஸ் ஆபீசர் விவேக்கைத் தேடி செல்கிறாள்!

- மைதிலி மற்றும் அஞ்சலாவின் கொலைகளுக்கு காரணமான கிருஷ்ணா சந்தரின் சதி வெளிப்பட்டதா?
- திலீப் கொண்டுவந்த புட்டியில் பாம்பு விஷமில்லை, வெறும் தண்ணீர் மட்டுமே இருந்தது என விவேக் கண்டுபிடிக்க, அஞ்சலா எப்படி
மரணித்தாள்? - கிருஷ்ண சந்தரைத் தவிர்த்து அஞ்சலாவின் மரணத்தில் ஆதாயம் யாருக்கு? யார் இதில் சூத்திரதாரி? பவித்ராவா அல்லது வசந்தவா?
இனி விவேக்கின் விஸ்வரூபம் ஆரம்பம்….
